/* */

மக்களுக்கும் நகராட்சிக்கும் பாலமாக இருப்பேன்: திமுக வேட்பாளர் கார்கண்ணன் உறுதி

வெற்றி பெற்றவுடன் 2வது வார்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன்

HIGHLIGHTS

மக்களுக்கும் நகராட்சிக்கும் பாலமாக இருப்பேன்:   திமுக வேட்பாளர் கார்கண்ணன் உறுதி
X

சிவகங்கை நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்கண்ணன் 

நான் வெற்றி பெற்றால் 2 வது வார்டு மக்களுக்கும் நகராட்சிக்கும் பாலமாக இருந்து அனைத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி ஒரு முன்மாதிரி வார்டாக மாற்றிக் காட்டுவேன் என திமுக வேட்பாளர் கார்கண்ணன் தெரிவித்தார்.

சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டில் திமுக சார்பில் கார்கண்ணன் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் இந்த வார்டில் திமுக, அதிமுக ,அமமுக நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இவற்றில் திமுக கட்சியின் சார்பில் சிவகங்கை நகராட்சியில் 2வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கார்கண்ணன். தனது வார்டில் உள்ள மக்களோடு இணைந்து தங்கள் வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பெரியவர்களின் ஆசிபெற்று வாக்குகள் சேகரித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: நான் வெற்றி பெற்றவுடன் 2வது வார்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன். நூலகம், சிறுவர் பூங்கா, போன்றவைகள் ஏற்பாடு செய்ய முழு முயற்சி எடுப்பேன் .வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான, குடிநீர் குழாய் வசதி, தெருவிளக்கு அமைத்தல், சாக்கடை சுத்தம் செய்தல், போன்ற பணிகளை சிறப்பாக செய்து ஒரு முன்மாதிரி வார்டாக மாற்றிக் காட்டுவேன். வாக்களிக்கக் கூடிய அனைத்து வாக்காளர்களுக்கும் உண்மையாக உழைப்பேன். சிவகங்கை நகராட்சி க்கும் 2வது வார்டு மக்களுக்கும் பாலமாக இருந்து அனைத்தும் திட்டங்களையும் செய்து முடிப்பேன் என்று திமுக வேட்பாளர் கார்கண்ணன் தெரிவித்தார்

Updated On: 17 Feb 2022 9:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!