/* */

சேலம் ஆத்தூரில் குதிரை ரேக்ளா

சேலம் அருகே குதிரை ரேக்ளா என்ற குதிரை வண்டி ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, ஆர்வத்துடன் மொதுமக்கள் கண்டு களித்தனர்.

HIGHLIGHTS

சேலம் ஆத்தூரில் குதிரை ரேக்ளா
X

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தில் நண்பர்கள் கழு சார்பில் இன்று குதிரை வண்டி ஓட்டப்பந்தயம் ரேக்ளா போட்டி நடைபெற்றது. ஆத்தூர் -சேலம் நெடுஞ்சாலையில் வைத்து நடைபெற்றது. முதலில் சிறிய குதிரைக்கான போட்டி நடைபெற்றது இதில் ஆத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம் நாச்சியார் கோவில், குமாரப்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து வந்த 20 சிறிய குதிரைகள் போட்டியில் கலந்து கொண்டது. இதில் உடையார்பாளையம் காந்தி சிலையில் இருந்து 10 கி.மீ தூரம் போட்டி எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. இதில் திருக்கடையூரை சேர்ந்த மணி என்பவருடைய குதிரை முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், 2வது பரிசு 15 ஆயிரம் ரூபாயை ஆத்தூரை சேர்ந்த முனிராஜ் என்பருடைய குதிரையும், மூன்றாவது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் ஆத்தூரை சேர்ந்த வண்டி மாது குதிரையும் தட்டிச் சென்றது.


அதை தொடர்ந்து 15 கி.மீ தூரம் எல்லை கோடாக நிர்ணக்கப்பட்டு பெரிய குதிரைகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், குமாரபாளையம், ஆத்தூர், நாச்சியார் கோவில் ஆகிய ஊர்களில் இருந்து வந்த 13 குதிரைகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை திருச்சி சமயபுரத்தை சேர்ந்த அசேன்பாய் குதிரை முதல் பரிசான 25 ஆயிரத்தையும், 2வது பரிசை திருச்சியை சேர்ந்த நம்பி என்பவருடைய குதிரை 20 ஆயிரத்தையும் , சேலத்தை சேர்ந்த சின்னா ஏன்ற குதிரை 3வது இடத்தை பிடித்து 15 ஆயிரம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற குதிரைகளின் ஜாக்கியிடம் பெரிய குதிரைக்கான முதல் பரிசு 25 ஆயிரமும், சிறிய குதிரைக்கான முதல் பரிசு 20 ஆயிரம் உள்பட மொத்த ஒரு லட்சம் ரூபாய்கான பரிசு தொகையை விழா குழுவினர் வழங்கினார்கள். இந்த போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

Updated On: 17 Jan 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு