/* */

உதயநிதி பிறந்த நாள்: இராமநாதபுரத்தில் 4400 மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரத்தில் உதயநிதி பிறந்தநாளையொட்டி 4400 மரக்கன்றுகள் நடும் விழாவை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

உதயநிதி பிறந்த நாள்: இராமநாதபுரத்தில் 4400 மரக்கன்றுகள் நடும் விழா
X

இராமநாதபுரத்தில் உதயநிதி பிறந்தநாளையொட்டி 4400 மரக்கன்றுகள் நடும் விழாவை எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

இராமநாதபுரத்தில் உதயநிதி பிறந்தநாளையொட்டி 4400 மரக்கன்றுகள் நடும் விழாவை எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களின் 44 வது பிறந்தநாள் விழா கழக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி, இராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அவர்களின் ஆலோசனைப்படி, இராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சுழல் அணி சார்பில் சுற்றுச்சுழல் அணி மாவட்ட அமைப்பாளர் முகம்மதுசலாவுதீன் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அறம் விழுதுகள் முகம்மது சலாவுதீன் தலைமையில் நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ கலந்து கொண்டு 44 கிலோ கேக் வெட்டி, மாவட்டம் முழுவதும் 4400 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் படி 44 மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார். ஜெப.ஜெபஸ்தியான் வரவேற்றார்.

இதில் இராமநாதபுரம் தெற்கு நகர் திமுக செயலாளர் பிரவின் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ஒன்றியம் பிரபாகரன், வடக்கு ஒன்றியம் நாகலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் பிரவின், வெள்ளரி ஓடை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், அரியகுடி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேய பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  6. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  7. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  10. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...