/* */

இராமநாதசுவாமி கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் தடை: பக்தர்கள் ஏமாற்றம்

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் நேரடியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்.

HIGHLIGHTS

இராமநாதசுவாமி கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் தடை: பக்தர்கள் ஏமாற்றம்
X

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில்.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் நேரடியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறையொட்டி உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அனைத்து மத தளத்திலும் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளது.

இதனையடுத்து இன்று மொஹரம் விடுமுறை மற்றும் வார விடுமுறையையொட்டி இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

ஆனால் திருக்கோவில் நிர்வாகம் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததால் பக்தர்கள் இராமநாதசுவாமி திருக்கோவில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, கோவில் கிழக்கு ராஜ கோபுர வாசல் முன்பு நின்று சுவாமி தரிசனம் செய்து, கோயில் அருகில் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த தடையின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் என அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On: 20 Aug 2021 10:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு