/* */

ராமேஸ்வரம் - பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

தூக்குப்பாலத்தில் சென்சார் கருவிபொருத்தி ஆய்வு நடந்த நிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

ராமேஸ்வரம் - பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில்  ரயில் என்ஜின்  சோதனை ஓட்டம்
X

ராமேஸ்வரம் - பாம்பன் இடையயேயான ரயில் தூக்கு பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் கடந்த ஜுன் 28-ஆம் தேதி திடீரென்று தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் இராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.சென்னையிலிருந்து வரும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு, மண்டபத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. மேலும், வட மாநிலங்களி லிருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மீண்டும் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.

முன்னதாக பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து, சென்னை ஐ.ஐ.டி. பொறியாளர்கள், தூக்குப் பாலத்தில் சென்சார் கருவி பொருத்தி ஆய்வு வந்தனர். இந்நிலையில், இன்று பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் என்ஜின் மட்டும் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது தூக்குப் பாலத்தில் தண்டவாளத்தில் அதிர்வு,மற்றும் அலாய்மெண்ட் சோதனைகளை ஸ்கேனர் மற்றும் எக்கோசவுண்ட் கருவிகள் மூலம் ரயில்வே பொறியாளர்கள் கண்காணித்தனர். இதன் அறிக்கை தென்னக ரயில்வே பாலங்களின் முதன்மை பொறியாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பிறகு பயணிகளுடன் ரயிலை இயக்குவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

Updated On: 19 Aug 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...