/* */

வைகை ஆற்றின் கடைமடையில் வெள்ள பெருக்கு: 60 கிராமங்கள் துண்டிப்பு

வைகை ஆற்றின் கடைமடையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், 60 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வைகை ஆற்றின் கடைமடையில் வெள்ள பெருக்கு: 60 கிராமங்கள் துண்டிப்பு
X

சாலைகளில் சூழ்ந்துள்ள வெள்ளம். 

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வைகை அணை முழு கொள்ளவை எட்டியது. இதை தொடர்ந்து, வைகை அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கடைமடை பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. ராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்கள் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு திறந்து விடப்பட்டு, கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தை அடுத்த உள்ள கார்குடி, காவனூர், மென்னந்தி, புல்லங்குடி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த 600 ஏக்கரில் மிளகாய் நெல் போன்ற நடவு செய்திருந்த பயிர்களை வயல்வெளிகளை வெள்ளம் சூழ்ந்தது.

இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் திண்டாடி வருகின்றனர். ஆர். காவனூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தில் இருந்து காவனூர், பாண்டியூர், நயினார்கோவில் வழித்தடத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Updated On: 3 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  3. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  7. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  9. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  10. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!