/* */

மீன்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை

இராமநாதபுரத்தில் அமைச்சர் முன்பு அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மீன்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை
X

இராமநாதபுரத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இலங்கை கடற்படையால்பிடித்துச் செல்லப்பட்டு மீட்க முடியாமல் நஷ்டத்துக்கு ஆளான மீனவர்களின் விசைப்படகுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டுக்கான காசோலைகளை வழங்கினார். அமைச்சர் அரங்கிற்குள் நுழைந்தவுடன் கடந்த 2015ம் ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு நஷ்டத்துக்கு ஆளான தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் புயல் பாண்டி,அருளானந்தம், ஜெயந்தி, அடைக்கலம் ஆகிய நான்கு மீனவர்களுக்கு அவர்களது படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டுசேதமடைந்தும் அவர்களை மட்டும் இழப்பீடுவழங்குவதற்கான பட்டியலில் சேர்க்காமல் அதிகாரிகள் குளறுபடி செய்ததாக கூறி தங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கூக்குரல் எழுப்பி அங்கிருந்த மீன்வளத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பாதிக்கப்பட்ட மீனவர்களும், மீனவபெண்களும் தங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி தகராறில்ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு விழா நடைபெற்றது.விழா முடிந்து வெளியே வந்த உடன் பாதிக்கப்பட்ட மீனவ பெண் கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து எனக்கு இழப்பீடு வழங்க விட்டால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக கூறி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.உடனே அங்கிருந்த போலீசார் அவரோடு போராடி அந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் கூடுதல் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

Updated On: 10 April 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!