/* */

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது

மோடி அரசு உள்ளாட்சிகளுக்கு அதிக திட்டங்களை அளித்து வருகிறது என்றார் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்ஆனந்த்

HIGHLIGHTS

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் மல்லிகா கணேசனுக்கு ஆதரவாக சிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

கடந்த ஆறு மாதத்தில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக் குறியாகி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார் தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் போட்டியிடும் மல்லிகா கணேசனை ஆதரித்து அவருடைய மகனும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணைய உறுப்பினருமான டாக்டர் ஜி ஆனந்த் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் மோடியின் அரசு சாதனைகளை எடுத்துக்கூறி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.ஜி. ஆனந்த் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் தினசரி 150 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் குறிப்பாக ஆசிரியர்கள் கொடுக்கும் பாலியல் தொல்லை உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு வருகிறது .

தமிழகத்தில் மாற்றம் வேண்டும். அந்த மாற்றம் உள்ளாட்சியில் இருந்து தொடங்க வேண்டும் மோடி அரசு உள்ளாட்சிகளுக்கு அதிக அளவு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது . அதனை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை உறுதி செய்து உத்தரவிட்டு உள்ளது. எனவே மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை பாகுபாடு இன்றி நடந்து உரியவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவரும் நானும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டோம் அதன் அறிக்கையை 50 தினங்களுக்குள் ஆணையத்தின் தலைவர் அரசிடம் சமர்ப்பிப்பார். அறிக்கை பாகுபாடின்றி வழங்கப்படும். தமிழகத்தில் சிஸ்டம் சீர்குலைந்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றார் ஆர்.ஜி. ஆனந்த்..

Updated On: 16 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்