/* */

புதுக்கோட்டையில் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடக்கம்

போக்குவரத்துக்காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடக்கம்
X

புதுக்கோட்டையில் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு வழங்கிய எஸ்பி நிஷா பார்த்திபன்.

புதுக்கோட்டையில் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு வழங்கிய எஸ்பி நிஷா பார்த்திபன்.

தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்து வருவதால் வெளியில் பொது மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.மேலும் வாகனத்தில் செல்பவர்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்கு சாலை ஓரம் உள்ள கடைகளின் இளநீர் தர்பூசணி உள்ளிட்ட சாலையோர கடைகளில் தஞ்சமடைந்து பழச்சாறுகளை வாங்கி அருந்தி வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் வெயிலைப் பொருட்படுத்தாமல் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து காவலர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கோடை வெயில் துவங்கும் பொழுது காவல்துறையினருக்கு தர்பூசணி, இளநீர் ,மோர் உள்ளிட்டவைகள் காவல்துறை சார்பில் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளும் விதமாக போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆரஞ்சு ஜூஸ் வழங்கினார்.

வெயிலின் தாக்கம் குறையும் வரை தினம்தோறும் போக்குவரத்து காவலர்களுக்கு நீராகாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்வில் புதுக்கோட்டை டிஎஸ்பி லில்லி கிரேஸ் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 19 March 2022 8:08 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை