/* */

விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொளி மூலமாக நடைபெறும்: ஆட்சியர் தகவல்

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31.8.2021 காலை 11.30 மணியளவில் காணொளிக்காட்சி மூலம் நடத்தப்படுகிறது

HIGHLIGHTS

விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொளி மூலமாக நடைபெறும்: ஆட்சியர் தகவல்
X

(பைல்படம்) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொளி மூலமாக நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளும் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், விவசாயிகள் தங்கள் குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில், தற்போது காணொளிகாட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலி ருந்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 31.8.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் காணொளிக்காட்சி மூலம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், விவசாயிகள் குறை தீர்கூட்டம் நடைபெறுகிறது.புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு ,காணொளிக்காட்சி மூலம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவிக்க வேண்டும்

Updated On: 26 Aug 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...