/* */

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு

துக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கபுதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா தாஜ் கூட்ட அரங்கில் நடந்தது

HIGHLIGHTS

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு
X

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்க விழாவிவ் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்,  செஞ்சுரி லயன்ஸ் சாசன தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வை .முத்துராஜா

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கபுதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா புதுக்கோட்டை தாஜ் கூட்ட அரங்கில் நடந்தது.

விழாவுக்கு செஞ்சுரி லயன்ஸ் தலைவர் தெட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க உறுப்பினர் வளர்ச்சி குழு தலைவர்ஜெ . கண்ணன் வரவேற்றார்.

லயன்ஸ் சங்க செயலாளர் பக்தவச்சலம் ஆண்டறிக்கை வாசித்தார் மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆர் .ஆர் .கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 2022- 2023 ம் ஆண்டின் புதிய தலைவர் ஏ . அரவிந்த், செயலாளர் டேவிட்ராஜ், பொருளாளர் ஆர்.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பாலாஜி ,சின்னக்கண்ணு, திருநாவுக்கரசு, ரவிச்சந்திரன் தனபாலன், கண்ணன், குத்புதீன், அன்புசண்முகம், கிருஷ்ணசாமி, முரளி தேசிங்குராஜன், புவனேஸ்வரி தங்கமாளிகை நடராஜன், குமார், வைரவன் உள்ளிட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பின்னர் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் 8 பேருக்கு முன்னாள் ஆளுநர் ஆர்.சுவாமிநாதன் லயன்ஸ் பின் அணிவித்து வாழ்த்தினார். பொறுப்பேற்றுக் கொண்ட புதிய தலைவர் ஏ . அரவிந்த் ஏழைகள், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 14 வயது பள்ளி மாணவிக்கும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் நிவாரண உதவிகளும் மாற்று திறனாளிக்கு தையல் மிஷின் ஆகிய நலத்திட்டங்களை வழங்கி செயல்திட்டங்கள் பற்றிப்பேசினார்.

அவர் பேசுகையில், கண்ணொளித்திட்டம், பசுமை திட்டங்கள், லயன்ஸ் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவிகள் ஏழை மாணவர்களின் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்கள் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும் என கூறினார் கூட்டத்தில் செஞ்சுரி லயன்ஸ் சாசன தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வை .முத்துராஜா, லயன்ஸ் சங்கத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் புவனேஸ்வரி தங்கமாளிகை நடராஜன், வாக்கர்ஸ்கிளப் நிர்வாகிகள், விளையாட்டுதுறை அலுவலர்குமரன் மற்றும் மருத்துவர்கள்,சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள்,வழக்கறிஞர்கள் மரம் அறக்கட்டளை மரம் நண்பர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகனை வாழ்த்தினார்கள் . முன்னதாக நிறைவாக செஞ்சுரி லயன்ஸ் செயலாளர் டேவிட்ராஜ் நன்றி கூறினார் .

Updated On: 8 July 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  2. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  3. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  5. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  6. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  7. சினிமா
    Indian 2 புதிய ரிலீஸ் தேதி இதுவா?
  8. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  9. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  10. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!