/* */

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் உமா மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு கலெக்டர்  உமா மகேஸ்வரி  தகவல்
X

புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஷ்வரி (பைல் படம்)

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது :

2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.05.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27.08.2021-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.08.2021 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Updated On: 7 Jun 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!