/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 290 அரசு ஊராட்சி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கூட்டம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் 290 அரசு ஊராட்சி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் (23.04.2022) சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 290 அரசு ஊராட்சி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் 23.04.2022 சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தபள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்ட நிகழ்வில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து மறுகட்டமைப்பு நிகழ்வை சிறப்பாக நடத்திட தங்களின் 100 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகக் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009- இன் படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும். பள்ளி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், சமுதாயத்துக்கும் தொடர்பு ஊடகமாக இருந்து பணிகளை மேற்கொள்ளும்.

Updated On: 22 April 2022 8:32 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...