/* */

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் தேன்கூடு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் தேன்கூடுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  பொதுமக்களை அச்சுறுத்தும் தேன்கூடு
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிட மூன்றாவது தளத்தில் உள்ள தேன்கூடு.  

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடர்ந்த காட்டுப்பகுதி இருப்பதால் அதிக அளவில் பல்வேறு இடங்களில் மரத்தின் மேல் தேன்கூடுகள் இருந்து வருகிறது .

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பழைய கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் பெரிய அளவில் தேன்கூடு இருக்கிறது. இந்த அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல் அலுவலகப் பணிக்காக பொதுமக்களும் அந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். அலுவலகம் உள்ளே செல்லும் மேல் பகுதியில் பெரிய அளவில் தேன்கூடு இருப்பதால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அச்சம் அடைகின்றனர்.

குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் வெள்ளை அடிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் எதிர்பாராத விதமாக தேன்கூட்டில் ஏதாவது பலகைகள் கம்புகள் விழுந்து விட்டால் தேன் கூடு கலைந்து அங்கே பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேன் கூடு கலைந்து வண்டுகள் கடித்து விடும் நிலை இருந்து வருகிறது .

எனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் இருக்கும் தேன் கூட்டை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 10 Jan 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?