/* */

புதுக்கோட்டையில் தனிமைப்படுத்திக் கொண்ட ஆட்சியர், காணொலி மூலம் ஆலோசனை

புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் பாதித்த கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தனிமைப்படுத்திக் கொண்ட ஆட்சியர், காணொலி மூலம் ஆலோசனை
X

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஷ்வரி காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாகமேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கோவிட்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் மாவட்டஆட்சியர் உமாமகேஸ்வரி முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்றுஆய்வுக்கூட்டம் நடத்தினார்.கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :

தமிழகத்தில் கோவிட் நோய்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்காலஅடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்தவகையில் புதுக்கோட்டைமாவட்டத்திலும் தமிழக அரசின் உத்தரவின் படி கோவிட் நோய் தடுப்புநடடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள், கோவிட் தடுப்பூசி முகாம்,மாவட்டத்தில் கோவிட் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவமுகாம்கள், போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன்கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

நோய் தடுப்புப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்ககு உத்தரவிட்டார் மேலும் கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு தென்மேற்குபருவமழையின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஊரக வளர்ச்சித் துறையினர் தங்களது பகுதிகளில்உள்ள குளங்கள், ஊரணிகள் போன்ற நீர்நிலைகளில் உடைப்பு இருப்பின் அதனை உடனடியாக சரி செய்யவும், தேவையான மணல் மூட்டைகள், சாக்குபைகளை இருப்பு வைக்கவும், பொதுப்பணித் துறையினர் அனைத்து புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை சரிசெய்து பொதுமக்களை தங்க வைக்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.

அதேபோல்மீன்வளத்துறையினர் வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலைதொடர்பான முன்னெச்சரிக்கையினை மீனவர்களுக்கு தெரிவித்து தகுந்த முன்னேற்பாடு பணிகள் செய்யவும், மின்சாரத்துறையினர் பேரிடர்களால் பாதிக்கப்படும் மின்கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்து தடையற்ற மின்சாரம்வழங்கும் வகையில் தேவையான மின்கம்பங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், தீயணைப்புத் துறையினர் தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார்நிலையில் இருக்கவும் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி காணொலி காட்சி மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 2 Jun 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?