/* */

துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து : பொதுமக்கள் சாலைமறியல்

புதுக்கோட்டை தஞ்சாவூர்நெடுஞ்சாலையில் சின்னையாசத்திரத்தில் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து :  பொதுமக்கள் சாலைமறியல்
X

புதுக்கோட்டை சின்னையா சத்திரம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய  தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சிக்குட்பட்ட சின்னையாசத்திரம் கிராமத்தில் பல நூறு ஏக்கரில் பலஆண்டுகளாக பழத்தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்க்கப்பட்டு கிராமத்தின் சார்பில் ஏலத்தில் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த இடத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் 20 எம்விஏ திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது என மின் வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் கடந்த ஆண்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய பல தோட்டத்தில் துணை மின்நிலையம் அமைக்க கூடாது என கோரிக்கை மனுவை கொடுத்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மின் வாரியத்தின் சார்பில் சின்னையாசத்திரம் கிராம மக்கள் எதிர்ப்பை மீறி பல தோட்டத்தில் உள்ள மரங்களை துணைமின் நிலையம் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மரங்களை அகற்றும் பணியில் மின் வாரியம் ஈடுபட்டள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை புதுக்கோட்டை தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னையாசத்திரம் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலைகளில் மரக் கிளைகள் மற்றும் கட்டைகளைப் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தங்கள் பகுதிகளில் உள்ள பழத்தோட்டத்தில் துணை மின் நிலையம் அமைக்க கூடாது. அதன் அருகிலுள்ள வேறொரு இடத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், புதுக்கோட்டை தாசில்தார் செந்தில் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, இன்று மாலை மாவட்ட ஆட்சியருடன் ஊர் பொதுமக்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதன் பேரில், மறியல் போராட்டத்தை கைவிட்டனர். துணைமின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Updated On: 30 Sep 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...