/* */

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Today School News in Tamil -பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

HIGHLIGHTS

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப் பெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

Today School News in Tamil - புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப் பெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப் பெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் கடந்த 19.04.2022 அன்று நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத் தொகை ரூ.5,000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியை சார்ந்த பா.கீர்த்திகாவும், இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3,000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ் லெம்பக்குடி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி துவாரகாவும், மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மாணவன் ச.நாகராஜும் பெற்றனர்.

மேலும் அரசுப் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மணமேல்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இராஜஸ்ரீயும், பாலன்நகர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவி ஜெனட்மேரியும் பெற்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத் தொகை ரூ.5000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி பபிதாவும், இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மாணவி ஜோதியும் , மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ் புதுக்கோட்டை, அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஜனனி செந்தில்குமாரும் பெற்றனர்.

இதனையடுத்து 03.06.2022 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் முதல் பரிசுத் தொகை ரூ.5000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ் புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி செயலெட்சுமியும், இரண்டாம் பரிசுத் தொகை ரூ.3000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கைக்குறிச்சி பாரதி கல்வியியல் கல்லூரி மாணவி ஹேமாவும், மூன்றாம் பரிசுத் தொகை ரூ.2000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழ் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி கார்த்திகாவும் பெற்றனர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா இராமு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். நிகழ்சியை புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன் ஒருங்கிணைத்தார். இதில் செய்திமக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Jun 2022 8:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?