/* */

கிராமப்புற இளைஞர்களுக்கு கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை பயிற்சி

The training was conducted at Pudukottai Zonal Research Center of Agricultural University

HIGHLIGHTS

கிராமப்புற இளைஞர்களுக்கு கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை பயிற்சி
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற கோழி வளர்ப்பு, மேலாண்மை பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (MANAGE ) நிதியுதவியுடன் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிறுவனம்(SAMETI) மூலம் வளரும் தலைமுறையினரை தொழில்முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர் பயிற்சி (STRY) “கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை” என்ற தலைப்பில் தனுவாஸ்- மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் 6 நாட்கள் 28 இளைஞர்களுக்கு இலவச பயிற்சி நடைபெற்றது..

முதல் நாள் பயிற்சியினை திட்ட இயக்குநர்- அட்மா மா.பெரியசாமி தொடங்கிவைத்து பேசுகையில், கோழி வளர்ப்பு என்பது சிறு,குறு விவசாயிகள் முதல் அனைவருக்கும் பொருளாதாரத்தை அதிகரிக்க கூடிய ஒரு தொழிலாகும். கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலானோர் கோழி வளர்ப்பையே முதன்மை தொழிலாகவும் கொண்டுள்ளனர். விவசாயத்தில் கோழி வளர்ப்பு என்பது கூடுதல் வருமானம் தரும் தொழிலாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து துணை திட்ட இயக்குநர்- அட்மா பி.மரியரவி ஜெயக்குமார் பேசுகையில், கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. மேலும் வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன சிறிய அளவில் குடிசைத் தொழில் முதல் மிகப் பெரும் பண்ணைகள் வரை கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. பகுதி நேர விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் கோழி வளர்ப்பு மேற்கொள்வதால் கூடுதல்; நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்று குறிப்பிட்டார்.

தனுவாஸ் - மண்டல ஆராயச்;சி மற்றும் கல்வி மையம்,புதுக்கோட்டையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் பூ.பூவராஜன் பேசுகையில், கோழி வளர்ப்பு அதன் முக்கியத்துவம், சரியான இரகம் தேர்வு, கூண்டு இல்லா முறை வளர்ப்பு மற்றும் கூண்டு முறை வளர்ப்பு பற்றியும் கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை மற்றும்; தீவன கூட்டுப் பொருட்கள், கோழிகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் நோய் கட்டுப்பாடு மற்றும் மருத்துவ அறிகுறிகள்,மொத்த காயங்கள், தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பரிந்துரைக்கப்படும் தடுப்பூசி அட்டவணைகள், பொதுவாக கோழிகளுக்கு வரும் வைரஸ் நோய்கள் அவற்றிற்கான காரணம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கோழி வளர்ப்பில் எதிர்கால வாய்ப்புகள் பற்றியும் இளைஞர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் ந.சண்முகி செய்திருந்தார்.



Updated On: 20 Dec 2023 6:00 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை