/* */

புதுக்கோட்டையில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை ஒத்திகை நிகழ்ச்சி

புதுக்கோட்டையில் ஜனவரி 26 நடைபெறவுள்ள குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை ஒத்திகை நிகழ்ச்சி
X

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு  காவல்துறையின் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு வெகு சிறப்பாக தமிழகம் முழுவதும் குடியரசு தின விழா நிகழ்வுகள் நடைபெறும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடமாக குடியரசு தின விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதையை ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரை வரவேற்பது காவல்துறை கண்காணிப்பாளரை எவ்வாறு வரவேற்பது மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பு மரியாதையை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து உயர் அதிகாரிகள் காவலர்களுக்கு விளக்கி, காவல்துறையினர் செய்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On: 24 Jan 2022 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  5. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  9. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  10. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!