/* */

பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள்: புதுக்கோட்டையில் கபாடி போட்டி

முதல்நாளில் 20க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விறுவிறுப்பாக ஆர்வத்துடன் விளையாடினர்

HIGHLIGHTS

பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள்: புதுக்கோட்டையில் கபாடி போட்டி
X

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற கபாடி போட்டிகளை தொடக்கி வைத்த பாஜக நிர்வாகிகள்

புதுக்கோட்டை திலகர் திடலில் பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் மோடி லீக் கபாடி போட்டி நேற்று நள்ளிரவு இரவு 12 மணிக்கு தொடங்கியது.‌

முன்னதாக பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பாஜகவினர் கபாடி போட்டி நடைபெறும் வளாகத்தில் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி தொடங்கிய கபாடி போட்டியானது சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் 85 கிலோ எடையுடைய கபாடி வீரர்கள் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட அணியினர் பதிவு செய்துள்ள நிலையில், முதல்நாளில் 20க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விறுவிறுப்பாக ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.‌இந்த மோடி லீக் கபாடி போட்டியில் முதல் பரிசாக ஒரு லட்சத்து 72 ரூபாயும்‌ இரண்டாவது பரிசாக 5072 ரூபாயும் மூன்றாவது மற்றும் நான்காவது பரிசாக 2572 ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக் காண போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.‌ விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த மோடி கபாடி லீக் போட்டியை ஏராளமானோர் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

Updated On: 18 Sep 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?