/* */

தேமுதிக வேட்பாளருக்கு கட்சி நிர்வாகிகள் வாக்குகள் சேகரித்து தீவிர பிரசாரம்

நார்த்தாமலையில் இருந்து புறப்பட்ட பிரச்சார பயணம் அம்பாசமுத்திரம், தொடையூர், பாரப்பட்டி , காவேரி நகர் பகுதிகளில் நடந்தது

HIGHLIGHTS

தேமுதிக வேட்பாளருக்கு  கட்சி  நிர்வாகிகள்   வாக்குகள்  சேகரித்து தீவிர பிரசாரம்
X

நார்த்தாமலை கோயிலில் உள்ளாட்சித்தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தேமுதிகவினர்

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 9 வது வார்டு பதவிக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு முரசு சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தை வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு அன்னவாசல் கிழக்கு வார்டு எண் 9 இல் தேமுதிக வேட்பாளர் கா.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார்.இதையடுத்து ரவிச்சந்திரனுக்கு முரசு சின்னத்தில் வாக்குகள் கேட்டு நார்த்தாமலையிலிருந்து தொடங்கிய பிரசார பயணத்தை வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்து, முரசு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். நார்த்தாமலையில் இருந்து புறப்பட்ட பிரச்சார பயணம் அம்பாசமுத்திரம், தொடையூர், பாரப்பட்டி , தக்கீர் பட்டி, காவேரி நகர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரசார பயணத்தில் மாவட்ட அவைத்தலைவரும் தொகுதி பொறுப்பாளருமான நெடுவை துரைராஜ் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மன்மதன் ஒருங்கிணைந்த மாவட்ட தொழிற்சங்க செயலாளர் நேதாஜி சீனிவசன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் விமல் , வடக்கு மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் இளையராஜா, மாவட்ட இளைஞரின் துணைச்செயலாளர் முத்துசாமி, வர்த்தக அணி செயலாளர் கந்தர்வகோட்டை ராஜேந்திரன்.

அன்னவாசல் கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், அன்னவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, கிழக்கு ஒன்றிய பொருளாளர் பால்ராஜ்,, பள்ளத்து பட்டி பழனிச்சாமி, அன்னவாசல் பேரூராட்சி செயலாளர் கெங்கா மூர்த்தி, அன்னவாசல் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி நீலகண்டன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அடைக்கலம், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் ஒன்றியம் பேரூர் கழகம் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!