/* */

ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் நவ 7 -க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட , நலிவுற்ற , ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் பல லட்சம் பேர் இருக்கின்றனர்

HIGHLIGHTS

ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில்  அலுவல் சாரா உறுப்பினர்கள் நவ 7  -க்குள் விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டம் கைம்பெண்கள் (ம) ஆதறவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களுக்கு 07.11.2022 -க்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பெண்களின் மேம்பாட்டுக்காக சமூக நலவாரியம் செயல்பட்டு வந்தது. அதற்கான அமைச்சர்களும் இருந்து வந்தனர். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், சமூக நலத்துறை வாரியம் கலைக்கப்பட்டு, கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் என பெயர் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது. கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோரின் பிரச்னைகளை களைவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழிற் பயிற்சி, உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் "கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கப்பட்டது

இந்த வாரியத்தின் மூலம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற, நலிவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் பிரச்னைகளை களைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் உள்ளிட்டோர் பல லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு, சுயஉதவி குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதே இந்த கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் சீரிய நோக்கமாகும்.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் கைம்பெண்கள் (ம) ஆதறவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 04322-222270 பெற்று பூர்த்தி செய்து 7.11.2022க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Nov 2022 4:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?