/* */

ஆலங்குடி அருகே புதிய பேருந்து சேவை- அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வல்லத்திரா கோட்டையில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆலங்குடி அருகே புதிய பேருந்து சேவை- அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்
X

ஆலங்குடி அருகே வல்லத்திரா கோட்டையில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வல்லத்திராகோட்டையில் புதிய வழித்தடத்தில் புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கிக்கு புதிய நகர பேருந்தை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்

கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த பேருந்தை அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் நிறுத்திவிட்டனர். நிறுத்தப்பட்ட பேருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் இன்று முதல் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கு வட கிடக்கு பருவ மழை பெய்த போது தமிழக முதல்வர் பல்வேறு முயற்சி எடுத்து வருகிறார் 27 நாட்கள் நேரடியாக தமிழக முதல்வர் களத்தில் நின்று துரித நடவடிக்கை மேற்கொண்டதின் காரணமாக பேரிடர் காலத்தில் தமிழக மக்களைக் காப்பாற்றினார்.

நீர் மேலாண்மையை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளார்.

வேளாண்மையை காப்பாற்றுவதற்காகவும் தமிழகத்தில் நிலத்தடி நீரை இருக்கும் இன்னும் ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வர் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவார்.

மஞ்சப்பை திட்டததை அறிமுகப்படுத்தும்போது நாங்களே இவ்வளவு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இத்திட்டம் இந்தியாவிலும் பிரதிபலித்துள்ளது. நிறைய ஜவுளிக்கடைகளில் துணிப்பையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நம்மை பாதுகாக்கவும் விலங்குகளை பாதுகாக்கவும்மஞ்சப்பை பயன்பாடு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஓராண்டு காலத்திற்குள் இத்திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டு ஒருமுறை பயன்படுத்த கூடிய நெகிழி பயன்பாடு தடை செய்யப்பட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு தந்துள்ளனர். அதற்காக தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோன்.

தமிழக விவசாயிகளை குறிப்பாக டெல்டா விவசாயிகளையும் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளையும் பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகளையும் மண் வளத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் எந்த அபாயகரமான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை தமிழக முதல்வர் தந்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களை தாண்டி வெளிமாவட்டங்களில் இதுபோன்று அபாயகரமான திட்டங்கள் வரும்போது ஏற்படுகின்ற பாதிப்புகளை நம் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக முனைவர் அகமது இஸ்மாயில் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தமிழக முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்றார்.

Updated On: 10 Jan 2022 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?