/* */

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு

சின்ன வயது கனவு ஐஏஎஸ். அந்த இலக்கை அடைய கிராமம், நகரம், தமிழ் வழி, ஆங்கில வழி என்ற எதுவும் தடையில்லை

HIGHLIGHTS

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி:  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு
X

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை மாணவியை  அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்

முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ளது வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி கிராமம். பேருந்து பயணம் செய்ய 5 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இந்த கிராமத்தை சேர்ந்த டீ கடை நடத்தும் வீரமுத்து - வீரம்மாளின் 3 வது மகள் பவனியா தான் தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார்.

அரசு பள்ளி, கல்லூரியில் படித்து முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற சாதனை பெண் பவானியாவை பலரும் பாராட்டி வரும் நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நடந்த புத்தகத்திருவிழாவில் பவனியாவை பாராட்டி பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கி, ஐஏஎஸ் இலக்கை வெல்ல வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதற்கான உதவிகளையும் செய்வதாகவும் கூறியுள்ளார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்பட பலரும் பாராட்டினர்.எனது சிறுவயது கனவு ஐஏஎஸ். அந்த இலக்கை அடைய கிராமம், நகரம், தமிழ் வழி, ஆங்கில வழி என்ற எதுவும் தடையில்லை அதற்கான பயணம் தொடர்கிறது என்றார் பவானியா.

Updated On: 3 Aug 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்