/* */

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துடன் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியருடன் காணொலி வாயிலாகஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துடன் ஆய்வு
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாகபுதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் தடுப்புநடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரியுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.

இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிட்நோயாளிகளின் எண்ணிக்கை, கோவிட் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், கோவிட் சிகிச்சை மையங்கள், காய்ச்சல் முகாம்கள், ஆர்டிபிசிஆர்பரிசோதனை எண்ணிக்கை போன்ற பல்வேறு கோவிட் தடுப்பு நடவடிக்கைகள்குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு, சிகிச்சைக் குறியபடுக்கைகளின் எண்ணிக்கை, தனியார் மருத்துவமனைகளில் உள்ள 50 சதவீதஇருக்கைகள் விபரம், மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கை, அடிப்படைவசதிகள் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.

கோவிட் நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில்போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்யுடன் காணொலிக்காட்சி வாயிலாக உரிய ஆலோசனைகளைவழங்கினார்கள்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த்மோகன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்சந்தோஷ்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, பொதுசுகாதாரத் துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயக்குமார் உள்ளிட்டதொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 7 May 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?