/* */

இலவச மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து கொண்ட திமுக எம்பி

இலவச மருத்துவ முகாமில் அப்பகுதி உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டனர்

HIGHLIGHTS

இலவச மருத்துவ முகாமில்  பரிசோதனை செய்து கொண்ட திமுக எம்பி
X

புதுக்கோட்டை பிச்சத்தான் பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 22வது வார்டு திமுக சார்பில் நடைபெற்ற   இலவச மருத்துவ பரிசோதனை   முகாமில் கலந்துகொண்ட மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா தன்னுடைய உடலை பரிசோதனை செய்து கொண்டார்

இலவச மருத்துவ முகாமில் திமுக எம்பி எம்எம் அப்துல்லா தன்னுடைய உடலை பரிசோதனை செய்து கொண்டார்

தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் மாவட்டம் முழுவதும் அவருடைய பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இன்று புதுக்கோட்டை 22வது வட்ட திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் பிச்சத்தான்பட்டியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமினை திமுக மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா கலந்துகொண்டு மருத்துவ முகாமில் பார்வையிட்டார்.பின்னர் மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்துகொண்ட மாநிலங்களவை எம்பி அப்துல்லா தன்னுடைய உடல் நிலை குறித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொண்டார்.இந்த இலவச மருத்துவ முகாமில் அப்பகுதி உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டனர்.இந்த முகாமினை 22 வது வட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Jan 2022 11:30 AM GMT

Related News