/* */

புதுக்கோட்டையில் பாரம்பரிய உணவுகளை அருந்திய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்ட சத்துணவு பணியாளருக்கான மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் பாரம்பரிய உணவுகளை  அருந்திய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
X

 புதுக்கோட்டையில் பாரம்பரிய உணவுகளை ருசித்து அருந்திய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை காவலர் கூட்டரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட சத்துணவு பணியாளருக்கான மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியத்திலும் சத்துணவு பணியாளர்கள் தங்களுடைய சமையல் திறமைகளை காண்பித்து கண்காட்சியாக வைத்திருந்தனர். மேலும் புதுக்கோட்டை நகராட்சி சார்பில் சமைத்த உணவுப் பொருள்களை கண்காட்சியாக வைத்திருந்தனர்.

மேலும் இந்த சமையல் போட்டியில் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, ராகி, உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய வகையான உணவுப் பொருட்களை சமைத்து கண்காட்சிக்காக வைத்திருந்தனர்.இந்த கண்காட்சியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு துவக்கி வைத்து ஒவ்வொரு கண்காட்சியாக சென்று பாரம்பரிய உணவுகளை உண்டு ருசித்து பார்த்து ரசித்தார்.இந்த கண்காட்சியில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரிகள் பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒவ்வொரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவுகளை ருசித்து உண்டனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று இடங்களைப் பெறும் பாரம்பரிய உணவைச் சமைத்துத் அதற்கான போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விரைவில் அதற்கான சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 April 2022 1:23 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...