/* */

புதுக்கோட்டை: கோயில் திறப்பதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி

கோயில்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து இந்தத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டை:  கோயில் திறப்பதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி
X

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவிலில் இன்று அம்பு போடும் நிகழ்வில் சந்திரசேகரர் சுவாமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

புதுக்கோட்டையில் கோயில்களை வெள்ளி,சனி, ஞாயிறு கிழமைகளில் திறப்பதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழா நிறைவு நாளன்று அம்பாள் அம்பு போடும் விழா நடைபெற்றது. அரக்கர்களை அழிப்பதற்காக அம்பாள் நவராத்திரி விரதம் இருந்து நிறைவு நாளன்று குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி நான்கு திசைகளில் இருந்து வரும் அரக்கர்களை அழிப்பதற்காக 50 அரக்கர்களை கொன்று பூமியில் உள்ள உயிர்களை காத்தருள்கிறார் என்று அம்பாள் திருவிளையாடல் புராணங்களில் கூறப்படுகிறது.



புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோவில் முன்பாக அம்பாள் எழுந்தருளி அம்பு போடும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த திருவிழாவை நடத்தும் வகையில், கோயில்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து விழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவுக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.


Updated On: 15 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது