/* */

கொரோனா பரவலுக்கு நாமே வழிவகுக்கலாமா? கோவிலில் சமூக இடைவெளி 'மிஸ்ஸிங்'

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூட்டம் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற கவலை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

கொரோனா பரவலுக்கு நாமே வழிவகுக்கலாமா? கோவிலில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்
X

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு கூட்டம் கூட்டமாக கூடிய பொதுமக்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக திருமண மண்டபங்கள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் சகஜநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சுப முகூர்த்த நாளான இன்று, புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

ஆனால், திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசங்கள் அணியாமல் இருந்தனர். அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி, இதுபோல் திருமண நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் , மீண்டும் பெருந்தொறு பரவும் சூழல் ஏற்படுமோ என்று, சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுபற்றி கோயில் நிர்வாகம் தரப்பிலும் எந்த ஒரு அறிவிப்போ, கண்காணிப்போ இல்லாதது, பலரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது. எனவே வருங்காலங்களில் அல்லது சுபமுகூர்த்த நாட்களில், கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்வுகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 8 Sep 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...