/* */

தடுப்பூசி போடுவதற்காக மணிக்கணக்கில் காத்துக் கிடைக்கும் பொதுமக்கள்

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

தடுப்பூசி போடுவதற்காக மணிக்கணக்கில் காத்துக் கிடைக்கும் பொதுமக்கள்
X

புதுக்கோட்டை  சந்தப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி போடுவதற்காக காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி தடுப்பூசி மட்டும் தான் என தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் விளைவாக பொதுமக்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாத காரணத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொடர்ந்து பல நாட்களாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதால் முதல் தடவை இரண்டாவது தடவை தடுப்பூசி போட்டவர்கள் தடுப்பூசி போட முடியாத ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று புதுக்கோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கோவாக் சின் இரண்டாவது தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை அறிவித்ததை அடுத்து இன்று காலை 6 மணி முதலே 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மணிக்கணக்கில் காத்துக் கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Updated On: 16 July 2021 6:04 AM GMT

Related News