/* */

நாட்டுப்புறப் பாடல் மூலம் நேரு யுவகேந்திராவினர் கொரோனா விழிப்புணர்வு

நேரு யுவகேந்திரா சார்பில் நாட்டுப்புற பாராட்டும் பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

நாட்டுப்புறப் பாடல் மூலம் நேரு யுவகேந்திராவினர் கொரோனா விழிப்புணர்வு
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நேரு யுவகேந்திரா சார்பில் நாட்டுப்புற பாராட்டும் பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், புதுக்கோட்டை மாவட்ட நேரு இளையோர் மையத்தின் சார்பில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி புதுக்கோட்டை பேருந்து நிலையம் புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் மற்றும் திருவரங்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமையில் முன்னாள் தொடக்கக்கல்வி அலுவலர் சதாசிவம் துவக்கி வைத்தார்.

புத்தாஸ் வீர கலைகள் கழக நிறுவனர் சேது கார்த்திகேயன் மற்றும் அன்னை இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

நேரு யுவகேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் நிகழ்ச்சி நோக்கம் குறித்து உரையாற்றினார்.

கொரோனா தடுப்பு நிகழ்ச்சிகள் குறித்த கலை நிகழ்ச்சியை கலைமாமணி சத்தியபாலன் மற்றும் கலை நன்மணி கலைச்செல்வி ஆகியோரது குழுக்கள் நாட்டுப்புற பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .

இந்த நிகழ்வில் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் சரவணன் சின்னராஜ் வாசு மற்றும் பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Nov 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்