/* */

புதுக்கோட்டை மியூசியத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பயன்படுத்திய கொத்துக் கரணை

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்டபைரவத் தொண்டைமான் இக்கரணையைக் கொண்டு 24.02.1913 அன்று புதியஅரண்மனைக்கு அடித்தளமிட்டார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மியூசியத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்பயன்படுத்திய  கொத்துக் கரணை
X

 புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்கு. வைக்கப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட  கொத்துக்கரணை.   

புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கொத்துக்கரணை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிலேயே இரண்டாவது அருங்காட்சியமாக இருந்து வருவது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகரணம் அரசு அருங்காட்சியம்தான்.இந்த அருங்காட்சியகத்தில் மன்னர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் போர் கருவிகள் மற்றும் பல்வேறு வகையான விலங்குகள் உயிருடன் பாடம் செய்து வைக்கப்பட்டு தத்துரூபமாக அதிக பொருட்செலவில் அமைந்துள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் மாதம் ஒருமுறை பள்ளி மாணவ மாணவிகள் கண்டு ரசிக்கும் விதத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மன்னர்கள் காலங்களில் பயன்படுத்தப்பட்ட மிக அரிதாக உள்ள பொருள்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசிப்பதற்காக காட்சிக்காக வைக்கப்படும் .

அந்த வகையில், இன்று புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் மார்ச் 1ஆம் தேதி இந்த மாதத்தில பார்வையாளர்கள் பார்வையிடுவதற்காக மாதாந்திர சிறப்பு அரும்பொருள் ஒன்று (கரணை அல்லது கொல்லறு) காட்சிக்கு வைக்கபபட்டுள்ளது. இவ்வரும் பொருள் வெள்ளி உலோகத்தாலானது.கைப பிடி வெள்ளி தந்தத்தால் ஆனது. மாட்சிமை தாங்கிய புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் அவர்கள் இக்கரணையைக்கொண்டு 24.02.1913 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள புதிய அரண்மனைக்கு அடித்தளமிட்டார்

இந்த அரிய பொருளை மேற்கண்ட மன்னர் புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் அன்பளிப்பாக மன்னர் அளித்தார். இவ் வரிய அரும்பொருளை அனைவரும் தற்போது இந்த மாதம் மார்ச் 31-ஆம் தேதி வரை வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் இரண்டாவது சனிக்கிழமையைத்தவிர நாள்தோறும் காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 1 March 2022 2:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?