/* */

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது தாமதமான முடிவு:அமைச்சர் ரகுபதி

மத்திய அரசு 3  வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது தாமதமான முடிவு:அமைச்சர் ரகுபதி
X

புதுக்கோட்டை ஒன்றியம் சின்னக்கணக்கன் பட்டி பகுதியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதாராமு, எம்எல்ஏ-முத்துராஜா.

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறும் முடிவு காலம் தாழ்த்திய செயல் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னகணக்கன்பட்டியில் நேற்று தொடர்ந்து பெய்த கன மழையினால் கவிநாடு கம்மாயில்ருந்து மதங்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்ட.து. இந்த நிலையில், நேற்று இரவு கவிநாடு கண்மாயிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி மழை நீரானது புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கணக்கன்பட்டி உள்ளிட்ட 5 கிராம பகுதிகளுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் இரவு முழுவதும் பெரும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரடியாக அந்த பகுதியை ஆய்வு செய்து தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, திமுக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பாலங்கள் சேதம் அடைந்து உள்ளது எனவே அனைத்து பாலங்களும் கணக்கிடப்பட்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியமான இருக்கும் பாலங்களை உடனடியாக சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு குறித்த கருத்தை தமிழக முதல்வர்தான் கூறுவார். தமிழக அரசைப் பொருத்தவரை மூன்று வேளாண் சட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்து வந்தார். அதற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன் அதே போல் இன்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விளைவாக மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருப்பது காலம் தாழ்த்திய அறிவிப்பு என்றாலும் வரவேற்கத்தக்கது என்றார் அமைச்சர் ரகுபதி..



Updated On: 19 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  3. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  5. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  6. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  7. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  9. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  10. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு