/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு பிரச்சார இயக்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு பிரச்சார இயக்கத்தை நீதிபதி அப்துல் காதர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு பிரச்சார இயக்கம் தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு பிரச்சார இயக்கத்தை நீதிபதி அப்துல் காதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று முதல் தொடங்கி வரும் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இன்று கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பதற்கு கிராமம் கிராமமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொத்தடிமை முறை ஒழிப்பு குறித்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பிரச்சார இயக்கத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் தொடங்கி வைத்தார்.சார்பு நீதிபதி ராஜா சிறப்புரையாற்றினார்

பிரசார இயக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் கொத்தடிமைகளாக யாரும் பணியாற்றக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

Updated On: 7 Oct 2021 6:46 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...