/* */

வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
X

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு நபர் போலீசாரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை திருப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை செய்யும் போது அவர், பெரம்பூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை (42) என்பதும் இவர் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் உள்ள ராஜா (22) என்ற நபருடன் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து பொன்னுத்துரை கொடுத்த தகவலின் பேரில் ராஜாவை கைது செய்த போலீசார் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் சிதம்பரம் பகுதியில் திருடப்பட்ட ஒரு கார் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவருக்கு பின்னால் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளார்களா மேலும் இவர்கள் எத்தனை வாகனங்களை திருடி உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 8 Feb 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...