/* */

கிரிக்கெட் போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

கிரிக்கெட் போட்டியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

அதிமுக புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக பாசறை மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, வல்லத்திரா கோட்டை பகுதியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது, இவ்விழாவானது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழாவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அம்மாவின் ஆட்சி விளையாட்டிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும். எனக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும், உங்களுக்கு விளையாடுவது ரொம்ப பிடிக்கும், எங்களுக்கு விளையாடுவதற்கு நேரமில்லை அதனால் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கின்றோம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நேரு ஸ்டேடியத்தை 10 தலைமுறைகளும் பாராட்டும் வகையில் அமைத்துக் கொடுத்துள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கும் விளையாட்டுக்கள் மிகவும் பிடிக்கும்.

விளையாட்டு என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிகவும் அவசியமானது, உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. எவ்வளவு பெரிய மன அழுத்தங்கள், பிபி சுகர் இருந்தாலும் விளையாடும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்க வைக்கிறது. விளையாட்டு என்பது நமது ரத்தத்திலேயே ஊறி போயுள்ளது. அதிலும் கிரிக்கெட் போட்டி இன்று உலகமே ரசித்து விரும்பி பார்க்க விளையாடக்கூடிய ஒரு போட்டியாகும். வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் கூட வெற்றியும் நிலைத்திருக்கும் தோல்வியும் நிலைத்திருக்கும். ஆனால் விளையாட்டில் எது கிடைத்தாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சியும் இன்பத்தையும் கொடுக்கும். அந்த மகிழ்ச்சியும் இன்பமும் நிலைத்து நிற்க வேண்டும் என்று கூறி கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

மேலும் போட்டியில் சென்னை சேலம் ஈரோடு கன்னியாகுமாரி பெங்களூர் திருச்சி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர் போட்டியை நிறைவாக முதல் பரிசாக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் சார்பாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது

Updated On: 24 Jan 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்