/* */

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. ஆபிஸ் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. அலுவலகம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி. ஆபிஸ் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை
X

சின்னப்பிள்ளை என்பவர் வீட்டில் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர் வீட்டின்  உள்ள பீரோ பூட்டு உடைக்கப்பட்டு துணிகள் சிதறிகிடந்த போது எடுத்த படம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகேயுள்ள அபிராமபுரம் 3 வது தெருவில் வசிக்கும் ஊர்காவல்படையில் பணிபுரியும் ராணி மற்றும் அவரது மகன் ஆகிய இண்டு பேரும் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள புதியதாக கட்டுமானம் செய்யும் வீட்டில் சென்று இரவு தங்கி உள்ளனர்.

இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் அலமாரியில் வைத்து இருந்த 3 பவுன் தங்க தகை மற்றும் ஒரு இலட்சத்து ஆறு ஆயிரம் ரொக்கம், லேப்டாப் ஆகிய பொருகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது,

மேலும் அருகே வசிக்கும் சின்னப்பிள்ளை கணவர் மாரி முத்து ஆகியோர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக சின்ன பிள்ளைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது

மேலும் இதே போன்று அதே வீட்டின் மேலே மாடி வீட்டில் வசிக்கும் பொன்னுசாமி என்பவரது வீட்டில் வாசல் முன்பு செல்போனை வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்த போது விலை உயர்ந்த 2 செல்போன்களையும்,மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது

மேலும் ஒரே இரவில் 3 வீட்டில் 8 லட்சம் மதிப்பிலான தங்க நகை பணம், லேப்டாப் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தொடர்பாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தனி,தனியாக புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் வந்து, பரிசோதனை மேற்கொண்டு, போலீசார் திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள முக்கிய பகுதிகளில் இரவு நேரத்தில் மூன்று வீடுகளில் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...