/* */

பெரம்பலூரில் கட்டைப்பையில் பச்சிளம் குழந்தையையை வைத்து வீசிய கொடூரம்

பிறந்து சில மணி நேமே ஆன குழந்தையை கட்டைப்பையில் வைத்து குப்பைத் தொட்டியில் வீசி சென்றது யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் கட்டைப்பையில் பச்சிளம் குழந்தையையை  வைத்து வீசிய கொடூரம்
X
பைல் படம்

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் ,செல்வி என்பவருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிய நிலையில் குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்துள்ளார்.

கடந்த 08.08.21 தேதி அன்று ஆடி அமாவசையை முன்னிட்டு செல்வியும் அவரது கணவர் சகாதேவனும் கோயிலுக்கு செல்வதற்கா இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது பெரம்பலூர் கோனோரிபாளையம் புறவழிச்சாலையில் மதுபான கிடங்கு அருகில் பிறந்த நிலையில் பெண் குழந்தை கட்டை பையில் வைக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து இருவரும் எடுத்துச் சென்று பராமரித்துள்ளனர் .

இந்நிலையில் , இன்று காலையில் பச்சிளம் பெண் குழந்தையின் கண் நீல நிறத்தில் இருப்பதை பார்த்து பரிசோதணை செய்வதற்காக பெரம்பலூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர் .

அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையின் பெற்றோர்கள் யார் என்று கேட்டுள்ளார் சகாதேவன் ,செல்வியும் நடந்தை எடுத்து சொன்னார்கள்.

உடனே காவல்துறைக்கும் , சைல்டு லைனுக்கும் தகவல் கொடுத்தனர் மற்றும் பெரம்பலூர் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் திவ்யா , கோகிலா ஆகியோர் குழந்தையை மட்டும் பொறுப்பில் எடுத்துச் சென்று பெரம்பலூர் அசு தலைமை மருத்துவமனையில் தொட்டில் குழந்தை திட்டம் ஒப்படைத்துள்ளனர்.

இது போன்று குழந்தைகளை கண்டால் உடனே சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 11 Aug 2021 2:06 PM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  2. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  7. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  10. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!