/* */

பெரம்பலூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் நன்றி

பெரம்பலூில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க தலைவர்கள் தமிழகத்தில் 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கியமைக்கும், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளை அதிகப்படுத்தியமைக்கும் பேருராட்சி , நகராட்சி தரம் உயர்த்தியதற்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு எழுந்து நின்று கை தட்டி நன்றினர்.

அதனுடன் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் வழங்கினர்.அந்த மனுக்களில் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்டு கிடப்பில் போடப்பட்ட மருத்துவ கல்லூரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

100 நாள் வேலை திட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடந்த குளறுபடிகளை களைந்து அனைவருக்கும் முறையான வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பை தற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பெரம்பலூரில் வேளாண் கல்லூரி கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தது.

Updated On: 25 Sep 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  2. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  3. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  4. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  9. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு