நாமக்கல் மாவட்டத்தில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு : வானிலை அறிக்கையில் தகவல்

பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், நாளை 17ம் தேதி 38 டிகிரி செண்டிகிரேட் வரை பகல் நேர வெப்பம் இருக்கும். 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை, 35 முதல் 37 டிகிரி வரை வெப்பம் இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 24 டிகிரி முதல் 27 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து, மணிக்கு 8 முதல் 18 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நாளை மே 17ம் தேதி 36 மி.மீ., 18ம் தேதி 1 மி.மீ., 19ம் தேதி 10 மி.மீ., 20ம் தேதி 4 மி.மீ. 21ம் தேதி 4 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .
கோழிப்பண்ணையாளர்களுக்கு: கடந்த வாரம் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பலும் வெப்ப அயற்சியால் இறந்துள்ளன. எனவே பண்ணைகளில் கோடைகால பராமரிப்பு முறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். வெப்ப அயற்சியின் தாக்கத்தை குறைக்க தண்ணீர் தெளிப்பான்களைப் பயன்படுத்த வேண்டும். தீவனத்தில் விட்டமின் சி மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கலந்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu