நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு டி.சி., தற்காலிக மார்க் ஷீட் வழங்கும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு    டி.சி., தற்காலிக மார்க் ஷீட் வழங்கும் பணி துவக்கம்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, டி.சி. மற்றம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கி உள்ளது.

நாமக்கல்,

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த 8ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர் உயர் கல்விக்கான சேர்க்கை பெறுவதற்கு வசதியாக, பள்ளி மாற்று சான்றிதழ் (டி.சி.,) மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் டவுன்லோடு செய்து வழங்கலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததது. அதையடுத்து, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தேர்வு முடிவு வெளியான மறுநாளில் இருந்து, மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி கடந்த, 9 முதல் துவங்கி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர் சீனிவாச ராகவன், சான்றிதழ் கேட்டு வந்த மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி டி.சி., சான்றிதழ் வழங்கி வருகிறார். மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கலைச்செல்வி, மாணவியருக்கு, டி.சி., மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், இப்பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது வருகிறது.

Next Story