பூமிக்கு பேராபத்து வருமா?சூரிய வெடிப்பால் ஏற்படும் புவி தாக்கம்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

சூரியனில் வெடித்த அதிபெரும் புயல் – பூமிக்கு நேரும் தாக்கம்? விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
சூரியனில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு, சுமார் 10 இலட்சம் கிலோமீட்டர் தொலைவு வரை பரவி உள்ளது. இந்த வெடிப்பின் மூலம் வெளிச்சம், சூப்பர்ஹீட்டட் பிளாஸ்மா மற்றும் மின்னூட்டப்பட்ட துகள்கள் அதிக அளவில் வெளியேறியுள்ளன. இது பூமியின் காந்தவலயத்துடன் தொடர்பு கொண்டு, ஜியோமாக்னெடிக் புயலை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூரிய வெடிப்பு, ஒரு பெரும் சன்ஸ்பாட்டிலிருந்து (Sunspot AR3664) ஏற்பட்டுள்ளது. இது "X-Class" என வகைப்படுத்தப்படும் மிக ஆபத்தான வகை. இதன் தாக்கம் பூமியில் வடதுருவ ஒளி (Aurora Borealis) உருவாக்குவதுடன், செயற்கைக்கோள்கள், வானிலை மையங்கள், மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட அமைப்புகளில் தடைகளை ஏற்படுத்தக்கூடும்.
விஞ்ஞானிகள் மக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும், ஆனால் வானிலை மாற்றங்களை கவனிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu