சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் தேவைப்படுவோர் நாமக்கல் மாநகாட்சியை தொடர்புகொள்ளலாம்

பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாநகராட்சியில் புதிதாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் விடுபட்டுள்ள பகுதிகளுக்கு, பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திட்டம் நிறைவு பெற்று 5 ஆண்டுகளுக்கு இயக்குதல் மற்றும் பாராமரித்தல் பணியினை டிஎன்சிஆர்யுடிபி (TNCRUDP) திட்டத்தின் மூலம் ரூ. 211.83 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள கடந்த 12.3.2024 அன்று பணி உத்தரவு வழங்கப்பட்டு, பணி துவங்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தில், 11.13 மில்லியன் லிட்டர் (MLD) கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மாநகராட்சிக்கு சொந்தமான கொசவம்பட்டி உரக்கிடங்கு பகுதியில் வருகிற 30.9.2026-க்குள் நிறுவப்பட உள்ளது. மேலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட நீர் விவசாயம் மற்றும் இதர தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தேவையுள்ள விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நாமக்கல் மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu