விஜய் – PK கூட்டணி முடிவுக்கு வந்ததா? அரசியலில் புதிய ட்விஸ்ட்!

விஜய் – PK கூட்டணி முடிவுக்கு வந்ததா? அரசியலில் புதிய ட்விஸ்ட்!
X
தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தன் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை கடந்த பிப்ரவரி 26 அன்று மாமல்லபுரம் அருகே மிகச் சிறப்பாக கொண்டாடியது.

விஜய்-பிரசாந்த் கிஷோர் கூட்டணி எங்கே போனது? வெளியான கீல் தகவல் :

தமிழக அரசியலில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தன் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை கடந்த பிப்ரவரி 26 அன்று மாமல்லபுரம் அருகே மிகச் சிறப்பாக கொண்டாடியது. அந்த விழாவில், கட்சித் தலைவர் விஜய்க்கு இணையாகவே தேர்தல் வியூகக் கணனி பிரசாந்த் கிஷோருக்கு (PK) முக்கிய இடம் அளிக்கப்பட்டது.

பிரசாந்த் கிஷோர், தேர்தல் தொடர்பான ஆலோசனைகள், வியூகம், மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து கடந்த சில மாதங்களாக விஜயுடன் இணைந்து பணியாற்றி வந்தார். ஆனால், சமீபத்திய தகவலின்படி, அவர் தவெக தேர்தல் வியூகம் அமைக்கும் பணி இருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் விஜய் மக்கள் சந்திப்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் வெளியாகி இருப்பது பின்னணியில் சூழ்ச்சி மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது. பிரசாந்த் கிஷோருக்கு மேடையில் தரப்பட்ட அந்த “பிரத்யேக இடம்”, தற்போது நிறைவுக்கு வந்துள்ளதா? அல்லது இது வெறும் இடைவேளையா? என்பதை பொறுத்து தான் தமிழக அரசியல் திசை முடியும்.

Tags

Next Story
ai healthcare technology