/* */

நாமக்கல்லில் மறைந்த லாரி சம்மேளன தலைவர் செங்கோடன் பிறந்த நாள் விழா

நாமக்கல்லில் மறைந்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் தலைவர் செங்கோடன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மறைந்த லாரி சம்மேளன தலைவர் செங்கோடன் பிறந்த நாள் விழா
X

மறைந்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் செங்கோடன் பிறந்த நாள் விழாவில், அவரது சிலைக்கு எம்.பி சின்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக சார்பில், மறைந்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செங்கோடனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. கொமதேக தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி சின்ராஜ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செங்கோடனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ராஜசேகர், தமிழரசு, நகராட்சி கவுன்சிலர் பழனிச்சாமி, சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jun 2022 11:15 AM GMT

Related News