/* */

ஜேகேகேஎன் குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஜேகேகே நடராஜா நினைவு இயக்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவமுகாம் மற்றும் இலவச சேவை மைய முகாம் இன்று நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் தட்டாங்குட்டை பஞ்சாயத்து ஓலப்பாளையம், படைவீடு, பள்ளிப்பாளையம் கரட்டாங்காடு, சாணார்பாளையம் ஆகிய இடங்களில் இன்று (24 ம் தேதி) ஜேகேகே நடராஜா நினைவு இயக்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவமுகாம், இலவச சேவை மைய முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஜேகேகேஎன் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் திரு. ஓம்சரவணா அவர்கள் முன்னிலை வகித்து,குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். மருத்துவமுகாமில் பல் மருத்துவம்,கண்மருத்துவம், பொது மருத்துவம் ஆகிய பல இலவச மருத்துவ சேவைகள் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த மருத்துவமுகாமில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.


இலவச சேவை மைய முகாமில் நலவாரியத்தில் பதிவு செய்தல், ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்தல், மேலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்,நீக்குதல் போன்ற சேவைகள், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல், பான் கார்டு இல்லாதவர்களுக்கு புதிய பான்கார்டுக்கு விண்ணப்பித்தல், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்பட்டது. இந்த சேவை மைய முகாமில் ஏராளமான பொதுமக்கள் மிக ஆர்வமாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

Updated On: 24 Jan 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு