/* */

நெல்லுக்கடை மாரியம்மன் திருவிழா ரத்து- கலெக்டர் அறிவிப்பு

நாகப்பட்டினத்தில் உள்ள புகழ் பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயத்தில் 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடக்க உள்ள திருத்தேர், செடில் திருவிழா உள்ளிட்ட, ஆண்டுத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில், 144 ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாலும், தற்போது கொரோனா தொற்றுநோய் மேலும் தீவிரமாக அதிகரித்து வருவதாலும், திருவிழாக்கள் மற்றும் மத கூட்டங்கள் நடத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புகழ்பெற்ற நாகை நெல்லுக்கடை ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் இந்த ஆண்டு வரும் 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்க உள்ள திருத்தேர், செடில் திருவிழா உள்ளிட்ட, ஆண்டுத்திருவிழா நடத்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார்.

Updated On: 19 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...