/* */

வேளாங்கண்ணியில் அ.ம.மு.க. சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா

வேளாங்கண்ணியில் அ.ம.மு.க. சார்பில் நடந்த ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார்.

HIGHLIGHTS

வேளாங்கண்ணியில் அ.ம.மு.க. சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா
X

வேளாங்கண்ணியில் நடந்த கிறிஸ்துமஸ்  விழாவில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா கழக அமைப்பு செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் தலைமையில் நடைபெற்றது. பூர்ணகும்ப வரவேற்புடன் தொடங்கிய விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து பாதிரியார்கள் வழங்கிய குழந்தை இயேசுவை டி.டி.வி. தினகரனிடம் குடிலில் வைத்தார். இதில் பங்கு தந்தைகள், அ.ம.மு.க. துணை பொது செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய டி.டி.வி. தினகரன் மதம், இனம், ஜாதியின் பெயரால், அமைதி பூங்காவாக உள்ள நமது மாநிலத்தை நமது நாட்டை அரசியல் காரணங்களுக்காக ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காக பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், சிலர் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் போல் கட்டிக்கொண்டு இன்று ஆட்சியில் அமர்ந்த பின் அவர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும் என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய டி.டி.வி. தினகரன்

கொடநாடு எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவருக்கு தெரியும் என்பதால்,விவேக்கிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இருக்கலாம் என்றார். மேலும் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் தாண்டி குதிக்கிறார்கள். அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளுங்கட்சியாக வந்தால் பழைய குருடி கதவை திறடி என்பது போல் தாங்கள் கூறியதை மறந்துவிட்டு ஒன்றிய அரசுக்கு இணக்கமாக செல்கின்றனர். இதை தான் எதிர்கட்சியாக இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தற்போது செய்கிறார். மாறி, மாறி குறை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் மாற மாட்டார்கள். மக்கள் தான் இதற்கான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார். மேலும் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க - அ.தி.மு.க. இணைப்பு உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று டி.டி.வி. தினகரன் தலையாட்டி பதிலளித்தார்.

Updated On: 23 Dec 2021 4:23 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  3. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  7. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  8. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  10. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்