/* */

ரூ.5.55 கோடி மதிப்பு திட்டத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் துவங்கி வைப்பு

ரூ.5 கோடியே 55லட்சம் திட்ட மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கான கட்டுமான பணிகளை அமைச்சர் துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ரூ.5.55 கோடி மதிப்பு திட்டத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் துவங்கி வைப்பு
X

கிருஷ்ணகிரியில் 5கோடியே 55லட்சம் திட்ட மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கான கட்டுமான பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி துவங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சின்ன ஏரியை அழகு படுத்தும் நோக்கில் தமிழக அரசு 3 கோடியே 36லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை அடுத்து சின்ன ஏரியை புனரமைத்து ஏரியை சுற்றி நடைப்பாதை அமைப்பதுடன் நகரை அழகுபடுத்தும் பணிக்கான கட்டுமானத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி இன்று பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்.

அதே போல் கிருஷ்ணகிரியில் பல்வேறு வார்டுகளில் 3 கிலோ மீட்டர் தூரம் பழுதடைந்து உள்ள சாலைகளை புதிய தார் சாலைகளாக அமைக்க 2 கோடியே 19 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசந்திர பானு ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜாஸ்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Dec 2021 6:21 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...