/* */

கிருஷ்ணகிரி: ஒரே நாளில் 454 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி: ஒரே நாளில் 454 பேருக்கு கொரோனா
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், மேலும் ஒருவர் பலியானார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 55 வயது ஆண். காய்ச்சல், இருமல் காரணமாக அவதிப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது. அவர் கடந்த 26ம் தேதி சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அன்று மாலை இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 279 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 ஆயிரத்து 707 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது ஆயிரத்து 795 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2021 3:28 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு